ஜெயலலிதா மரணம் தொடர்பான சந்தேகங்களை தெளிவுபடுத்த வேண்டும்: ஜி.கே.வாசன்

தமாகா தலைவர் ஜி.கே.வாசன் இன்று காலை தேனாம்பேட்டையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: வர்தா புயல் பாதிப்புகளை பார்வையிட மத்திய குழு விரைவில் வர வேண்டும். மீட்பு பணிகளை தமிழக அரசு துரிதப்படுத்த வேண்டும். மத்திய அரசிடம் தமிழக அரசு ரூ.10ஆயிரம் கோடி நிவாரணம் கேட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. அந்த தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். புயலுக்கு 18 பேர் பலியாகியுள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசு தலா ரூ.20லட்சம் வழங்க வேண்டும்.

டெல்டா மாவட்டங்களில் மட்டும் 30 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். சேது சமுத்திர திட்டம் தமிழகத்தின் நீண்ட நாள் கனவு திட்டம். மத்திய, மாநில அரசுகள் இணைந்து இந்த திட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும். சேலம் உருக்காலையை தனியாருக்கு தாரை வார்ப்பதை கண்டித்து சேலம் ரயில் நிலையம் அருகில் நாளை எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. வடசென்னை ராஜாக்கடை தூய பால் உயர்நிலைப் பள்ளியில் எனது தலைமையில் வரும் 21ம்தேதி கிறிஸ்துமஸ் விழா நடைபெறுகிறது. தமாகா இளைஞர் அணி சார்பில் தென்சென்னையில் வரும் 23ம்தேதி மரம் நடும் விழா தொடங்கப்படுகிறது.

முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தை அரசியலாக்கக் கூடாது என்றாலும் கூட இது தொடர்பாக அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ள கேள்விகளுக்கு, சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பதில் தமிழக அரசு தயக்கம் காட்டக்கூடாது. ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி ஜனவரி முதல் வாரத்தில் எனது தலைமையில் அலங்காநல்லூரில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது, துணை தலைவர் கோவை தங்கம், விடியல் சேகர், முனவர் பாட்ஷா, தலைமை நிலைய செயலாளர்கள் ஜி.ஆர்.வெங்கடேஷ், ஆர்.சீனிவாசன், மாவட்ட தலைவர்கள் கொட்டிவாக்கம் முருகன், பிஜூ சாக்கோ, சைதை மனோகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

முகநூலில் தொடர்பு கொள்ள

செய்திமடலுக்கு பதிவு செய்க

உங்கள் மின்னஞ்சல் முகவரி சமர்ப்பிக்கவும்

  • சமீபத்திய செய்திகள்
  • நிகழ்வுகள் செய்திகள்