ஜல்லிக்கட்டு நடத்துவதில் உள்ள சட்ட சிக்கலை நீக்கவேண்டும்: ஜி.கே.வாசன்

“கொள்கை முடிவுகளை உடனடியாக அமல்படுத்தி ஜல்லிக்கட்டு நடத்துவதில் உள்ள சட்ட சிக்கலை நீக்கவேண்டும்”, என்று மத்திய அரசுக்கு ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள் கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கினார். மூத்த துணைத்தலைவர்கள் பி.எஸ்.ஞானதேசிகன், கோவைத்தங்கம், கத்திப்பாரா ஜனார்த்தனன், பொதுச்செயலாளர் விடியல் சேகர், தலைமை நிலைய செயலாளர்கள் ஜி.ஆர்.வெங்கடேஷ், டி.எம்.அசோகன் உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி பணிகள், தேர்தல் முன்னோட்ட பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பணத்தட்டுப்பாடு காரணமாக மக்கள் தினந்தோறும் அவதிப்பட்டு வருகிறார்கள். சரியான திட்டமிடல் இல்லாமல், எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் அவசர கோலத்தில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துவிட்டது. கருப்பு-கள்ள பணத்தை ஒழிக்கவேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக்கருத்து கிடையாது. ஆனால் அதேநேரத்தில் சாமானிய மக்கள் பாதிக்கப்படுவதை ஏற்கமுடியாது. இந்த விவகாரத்தில் மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்துவதில் பா.ஜ.க. அரசு தவறிவிட்டது.

அதேபோல தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான, குறிப்பாக தென்மாவட்ட மக்கள் முக்கிய விழாவாகவே பார்க்கும் ஜல்லிக்கட்டு நடத்துவதில் சட்டசிக்கல் உள்ளது என்று மத்திய அரசு கூறிவருகிறது. முறையான கொள்கை முடிவுகள் எடுத்து, அதை நடைமுறை படுத்தினால் ஜல்லிக்கட்டுக்கு எந்த விதத்திலும் கோர்ட்டு தடை வழங்காது. எனவே அப்படிப்பட்ட கொள்கை முடிவுகளை உடனடியாக அமல்படுத்தி ஜல்லிக்கட்டு நடத்துவதில் உள்ள சட்ட சிக்கலை மத்திய அரசு நீக்கவேண்டும். அடுத்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறுவதை உறுதிசெய்ய வேண்டும்.

இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.

முகநூலில் தொடர்பு கொள்ள

செய்திமடலுக்கு பதிவு செய்க

உங்கள் மின்னஞ்சல் முகவரி சமர்ப்பிக்கவும்

  • சமீபத்திய செய்திகள்
  • நிகழ்வுகள் செய்திகள்