பணத் தட்டுப்பாடு: மத்திய அரசைக் கண்டித்து ஜி.கே.வாசன் ஆர்ப்பாட்டம்

பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததையடுத்து ஏற்பட்டுள்ள பணத் தட்டுப்பாட்டைக் கண்டித்து தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தலைமையில் சென்னையில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஜி.கே.வாசன் பேசியது:

எந்தவித முன் அறிவிப்பும் இன்றி மத்திய அரசு ரூ.500, 1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது. இதனால் பணத்தை மாற்றுவதற்காக பொதுமக்கள் வங்கிகள்தோறும் அலைகின்றனர். மத்திய அரசானது பெரும் பணக்காரர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு சாதாரண மக்களை நசுக்குகிறது. இந்த நடவடிக்கைக்குப் பதிலாக பெரும் பணக்காரர்களின் வாராக் கடனை வசூலித்தாலே போதும்.

மருத்துவமனை, பெட்ரோல் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் நவம்பர் 24-ஆம் தேதி வரை, பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளைப் பயன்படுத்தலாம் என்ற கால அவகாசத்தை மத்திய அரசு மேலும் ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும் அனைத்து ஏடிஎம் மையங்களிலும் தேவையான அளவு பணத்தை நிரப்ப வேண்டும் என்றார் அவர். கட்சியின் மூத்த துணைத் தலைவர் ஞானதேசிகன் உள்பட பலர் போராட்டத்தில் பங்கேற்றனர்.

முகநூலில் தொடர்பு கொள்ள

செய்திமடலுக்கு பதிவு செய்க

உங்கள் மின்னஞ்சல் முகவரி சமர்ப்பிக்கவும்

  • சமீபத்திய செய்திகள்
  • நிகழ்வுகள் செய்திகள்