சீர்திருத்தம் என்ற பெயரில் பொருளாதார சீர்குலைவு: ஜி.கே.வாசன் குற்றச்சாட்டு

முறையாக திட்டமிடாததாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாததாலும், 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த மத்திய பாஜக அரசால், நாட்டில் பொருளாதார சீர்குலைவு ஏற்பட்டுள்ளது என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் குற்றம்சாட்டினார்.

கும்பகோணம் தாராசுரம் அறி ஞர் அண்ணா காய்கறி சந் தைக்கு நேற்று காலை சென்ற ஜி.கே.வாசன் அங்கு வியாபாரி களையும், பொதுமக்களையும் சந்தித்து ரூபாய் நோட்டுகளால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மத்தியில் ஆளும் பாஜக அரசு, நாட்டில் பொருளாதார சீர்திருத்தம் கொண்டுவர கறுப்புப் பணம், கள்ளப் பணத்தை ஒடுக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறி 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. இந்த அறிவிப்பு நாட்டில் பொருளாதார சீர்திருத்தத்துக்குப் பதிலாக, பொருளாதார சீர் குலைவை ஏற்படுத்தி உள்ளது.

இதனால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கிடைக் கும் 2,000 ரூபாய் நோட்டுக்கும் சில்லறை கிடைக்காததால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, ஏடிஎம்களில் 100 ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் இருக்க வேண்டும்.

தனியார் மருத்துவமனை, பெட்ரோல் பங்க், சமையல் காஸ் சிலிண்டர் உள்ளிட்ட அத் தியாவசியப் பொருட்களுக்காக அரசால் அளிக்கப்பட்டுள்ள கோட் பாடுகளின் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்.

மத்திய கூட்டுறவு வங்கி களில் பணப் புழக்கம் இல்லா ததால், அவை மூடப்பட்டு அடித்தட்டு கிராம மக்கள், விவசாயிகள் முன்னேற்றமின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, நாட்டில் பணப் புழக்கம் சீரடைய மத்திய பாஜக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கும்பகோணம் தாராசுரம் காய்கறி சந்தையில் காய்கறி விற்கும் பெண்ணிடம் பணத் தட்டுப்பாடு குறித்து ஜி.கே.வாசன் கேட்டறிந்தார்.

முகநூலில் தொடர்பு கொள்ள

செய்திமடலுக்கு பதிவு செய்க

உங்கள் மின்னஞ்சல் முகவரி சமர்ப்பிக்கவும்

  • சமீபத்திய செய்திகள்
  • நிகழ்வுகள் செய்திகள்