ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: பல்வேறு கட்சிகளில் இருந்து விலகியவர்கள் தமாகாவில் இணையும் விழா சென்னை தி.நகரில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவுக்கு தென்சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் கொட்டிவாக்கம் முருகன் தலைமை வகித்தார். கட்சி தலைவர் ஜி.கே.வாசன் முன்னிலையில் பிற கட்சிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தமாகாவில் இணைந்தனர். மூத்த துணை தலைவர் ஞானதேசிகன், கோவை தங்கம், விடியல் சேகர், கத்திப்பாரா ஜெனார்த்தனன், என்.டி.எஸ்.சார்லஸ், சக்திவடிவேல், முனவர் பாட்ஷா, யுவராஜா, ஜி.ஆர்.வெங்கடேஷ், சீனிவாசன், தி.நகர் கோதண்டன், மயிலை சந்திரசேகர், மாவட்ட தலைவர்கள் பிஜூ சாக்கோ, சைதை மனோகரன், விக்டரி மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக ஜி.கே.வாசன் நிருபர்களிடம் கூறியதாவது: காரைக்கால் பகுதியை சேர்ந்த மீனவர்களை இலங்கை கடற்படை துப்பாக்கியால் சுட்டு அச்சுறுத்தியுள்ளது. டெல்லியில் மீனவர்கள், அதிகாரிகள் மத்தியில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி என்பதை இந்த சம்பவம் நிரூபித்துள்ளது. பழைய நோட்டுகளை மாற்றும் விஷயத்தில் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். அதுவும் கைவிரலில் மை என்ற மத்திய அரசின் அறிவிப்பு சாதாரண மக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடியின் இந்த திட்டத்தை சரி என்று நினைத்தாலும், முறையான திட்டமிடுதல் இல்லாமலும், முன்எச்சரிக்கை இல்லாமல் செயல்படுத்தப்பட்டது சரியல்ல.நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடக்கும் இந்த நேரத்தில் ஜல்லிக்கட்டு பிரச்னையில் மத்திய அரசு சட்ட ரீதியாக ஒரு கொள்கை முடிவை எடுக்க வேண்டும்.

அந்த முடிவின் மீது நீதிமன்றம் தலையிட முடியாது. அதற்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். ஜல்லிக்கட்டு நடத்த மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி டிசம்பர் முதல் வாரத்தில் தமாகா சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இவ்வாறு வாசன் கூறினார்.

முகநூலில் தொடர்பு கொள்ள

செய்திமடலுக்கு பதிவு செய்க

உங்கள் மின்னஞ்சல் முகவரி சமர்ப்பிக்கவும்

  • சமீபத்திய செய்திகள்
  • நிகழ்வுகள் செய்திகள்