தமிழகத்தில் மீத்தேன் எரிவாயு திட்டம் ரத்து: மத்திய அரசின் அறிவிப்புக்கு ஜி.கே.வாசன் வரவேற்பு

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

10–11–2016 அன்று (நேற்று) மத்திய பெட்ரோலிய துறை மந்திரி, தமிழகத்தில் டெல்டா மாவட்ட விவசாயிகளின் நீண்டகால கோரிக்கையை ஏற்று மீத்தேன் எரிவாயு திட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்திருக்கிறார். இது வரவேற்கத்தக்கது. மேலும், தமிழகத்தில் ஷேல் எரிவாயு எடுக்கும் திட்டம் தொடர்பான ஆய்வுகள் நடத்தப்படாது என்று மத்திய பெட்ரோலிய துறை மந்திரி தெரிவித்திருக்கிறார். இருப்பினும் இந்த ஷேல் எரிவாயு திட்டத்தை மத்திய அரசு முழுமையாக கைவிட வேண்டும்.

மேலும், மத்திய அரசு டெல்டா மாவட்ட விவசாயிகளின் நீண்டகால எதிர்ப்பான காவிரி மேலாண்மை வாரியத்தையும் உடனே காலம் தாழ்த்தாமல் அமைக்க முன்வர வேண்டும். எனவே, மத்திய அரசு தமிழகத்தில் விளை நிலங்களை பாதிக்கும் மீத்தேன், ஷேல் போன்ற எந்த ஒரு திட்டத்தையும் கொண்டுவர இனிமேல் முயற்சிக்க கூடாது என்று த.மா.கா. சார்பில் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முகநூலில் தொடர்பு கொள்ள

செய்திமடலுக்கு பதிவு செய்க

உங்கள் மின்னஞ்சல் முகவரி சமர்ப்பிக்கவும்

  • சமீபத்திய செய்திகள்
  • நிகழ்வுகள் செய்திகள்