தமிழக மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுக: ஜி.கே.வாசன்

தமிழக மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இளநிலை, முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்குப் பிறகு மருத்துவர்களுக்கு தேசிய உரிமத் தேர்வு (National Licenciate Test) என்ற EXIT TEST தேர்வை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்திய மருத்துவக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் தான் மருத்துவம் படிக்கின்ற மாணவர்கள் பயில்கிறார்கள். மேலும் மத்திய, மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களால் நடத்தப்படும் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற பிறகு தான் மருத்துவர்களாக தகுதி பெறுகின்றனர். அதன் பிறகு பயிற்சி மருத்துவத்தை முடித்துவிட்டு தங்களை மருத்துவர்களாக முறையாக பதிவு செய்து கொண்டு, மருத்துவ சேவையாற்றுகின்றனர். இந்நிலையில் பயிற்சி மருத்துவத்தை முடித்த உடன் தேசிய உரிமத் தேர்வு நடத்தும் முறையை மத்திய அரசு கைவிட வேண்டும்.

'NEET' நுழைவுத் தேர்விலிருந்து தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இளநிலை, முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவ இடங்களுக்கு விலக்கு அளித்திட மத்திய அரசின் 'NEET' சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும். அரசியல் சட்டத்திற்கும், கூட்டாட்சி கோட்பாட்டிற்கும், மாநிலங்களின் உரிமைகளுக்கும் எதிரான 'NEET' சட்டத்தில் இருந்து தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ இடங்களுக்கு விலக்கு பெற்றிட தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இளநிலை, முதுநிலை மற்றும் உயர் சிறப்பு மருத்துவ இடங்கள் அனைத்தும் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமே என்ற நிலையை உத்தரவாதம் செய்திட அகில இந்திய தொகுப்பில் இருந்து (All India Quota System) வெளிவர தமிழக அரசு சட்ட நடவடிக்கையை எடுக்க முன்வர வேண்டும்.

எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் நிறுவப்படும் என்று அறிவித்த மத்திய அரசு அதனை உடனடியாக தொடங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மருத்துவ கல்வியில் மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படமால் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். இறுதி ஆண்டு மருத்துவம் மற்றும் முதுநிலை மருத்துவக் கல்வியில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு அடுத்த ஒரு மாதத்திற்குள்ளாகவே மறுதேர்வு நடத்திட வேண்டும். “எய்ம்ஸ்” மருத்துவ கல்லூரியில் மர்மான முறையில் இறந்து போன டாக்டர் சரவணன் கணேசன் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும்.

எனவே தமிழக மருத்துவ மாணவர்கள் மற்றும் மருத்துவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

முகநூலில் தொடர்பு கொள்ள

செய்திமடலுக்கு பதிவு செய்க

உங்கள் மின்னஞ்சல் முகவரி சமர்ப்பிக்கவும்

  • சமீபத்திய செய்திகள்
  • நிகழ்வுகள் செய்திகள்