ஆதரவற்ற குழந்தைகள்–முதியோர்களுடன் ஜி.கே.வாசன் தீபாவளி கொண்டாட்டம்

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில், அன்னை ஆதரவற்ற முதியோர்கள் இல்லம், அன்னை பாத்திமா குழந்தைகள் நலக்காப்பகத்தில் உள்ள சிறுவர்–சிறுமிகளுடன் நேற்று தீபாவளியை கொண்டாடினார். அப்போது முதியோர்களுக்கு புத்தாடை வழங்கினார். குழந்தைகளுக்கு பட்டாசு, இனிப்பு, நோட்டு–புத்தகங்கள், பரிசு பொருட்கள் வழங்கினார்.

நிகழ்ச்சியின் போது ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

காவிரி நதிநீர் பிரச்சினையில் தமிழக விவசாயிகளின் உரிமைகளை பெற்று தர ஒவ்வொருவரும் இந்த தீபாவளி பண்டிகையில் உறுதி ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏழை, எளிய, நடுத்தர மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் உள்ள மக்களுடன் வசதி படைத்தவர்கள் தீபாவளியை இணைந்து கொண்டாட வேண்டும்.

மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை காலம் தாழ்த்தாமல் உடனடியாக அமைக்க வேண்டும். சட்டசபை குழுக்களை பல்வேறு முக்கிய துறைகளுக்கு அமைக்க வேண்டும் என்பது மரபு. அது அரசின் கடமை. எனவே தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் குழுவை அமைக்கும் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார். நிகழ்ச்சியில் அன்னை இல்லம் நிர்வாகி ராணி கிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

முகநூலில் தொடர்பு கொள்ள

செய்திமடலுக்கு பதிவு செய்க

உங்கள் மின்னஞ்சல் முகவரி சமர்ப்பிக்கவும்

  • சமீபத்திய செய்திகள்
  • நிகழ்வுகள் செய்திகள்