காவிரி விவகாரம் அரசியல் பிரச்சனையல்ல... விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சனை... ஜி.கே.வாசன்

காவிரி நதிநீர் பிரச்சனை என்பது அரசியல் பிரச்சனை அல்ல என்றும் அது விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சனை என்று தமாகா தலைவர் ஜி.கே. வாசன் கூறியுள்ளார்.

திமுகவின் அனைத்து கட்சி கூட்டம் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ், தாமாக உள்ளிட்ட பல கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்திற்கு பிறகு செய்தியாளரிடம் பேசிய தமாகா தலைவர் ஜி.கே.வாசன், காவிரி பிரச்சனை என்பது அரசியல் பிரச்சனை அல்ல என்றார். காவிரி நதிநீர் விவகாரம் என்பது தமிழக விவசாயிகளின் வாழ்வாதார பிரச்சனை என்றும் அவர் கூறினார்.

காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி கர்நாடக அரசு காவிரி நீரைத் திறந்து விட வேண்டும் என்று ஜி.கே. வாசன் கூறினார்.

முகநூலில் தொடர்பு கொள்ள

செய்திமடலுக்கு பதிவு செய்க

உங்கள் மின்னஞ்சல் முகவரி சமர்ப்பிக்கவும்

  • சமீபத்திய செய்திகள்
  • நிகழ்வுகள் செய்திகள்