பொது மற்றும் தனியார் துறைகளில் தமிழ்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும் - ஜி.கே வாசன்

தமிழகத்தில் உள்ள அரசு, பொது மற்றும் தனியார் துறைகளில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க மத்திய அரசு முன்வர வேண்டுமென, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களில் ஆங்கில மொழி மட்டுமே பயன்பாட்டில் இருப்பதால், வாடிக்கையாளர்களும், கிராமப்புறத்தைச் சார்ந்த மக்களும் பெரிதும் சிரமப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

செம்மொழி அந்தஸ்து பெற்றும், தமிழ் மொழி பயன்பாடு முழு அளவில் இல்லை என அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். எனவே தமிழகத்தில் உள்ள வங்கிகள், ஏடிஎம் மையங்களில் தமிழ் மொழியைப் பயன்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை, ரிசர்வ் வங்கி நடைமுறைப்படுத்த, மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாசன் வலியுறுத்தி உள்ளார்.

முகநூலில் தொடர்பு கொள்ள

செய்திமடலுக்கு பதிவு செய்க

உங்கள் மின்னஞ்சல் முகவரி சமர்ப்பிக்கவும்

  • சமீபத்திய செய்திகள்
  • நிகழ்வுகள் செய்திகள்