அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு போனஸ் தொகையை வழங்கிடுக: வாசன்

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு போனஸ் தொகையை உடனடியாக தமிழக அரசு வழங்க வேண்டும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

தீபாவளிப் பண்டிகை வரும் 29ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு வார காலத்திற்கு முன்பு தமிழக அரசு தீபாவளிப் பண்டிகைக்காக லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்குவதாக அறிவித்து, இன்னும் வழங்கவில்லை. இதற்கான முன்பணமும் கொடுக்கவில்லை.தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு போனஸ் தொகையை உடனடியாக தமிழக அரசு வழங்க வேண்டும்.

மேலும் அரசுப் பணியாளர் அல்லாத மற்ற ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கருணைத்தொகையை உடனடியாக வழங்க முன்வர வேண்டும். மேலும் பணியிலிருந்து ஒய்வு பெற்ற பணியாளர்களுக்கு முறையாக, சரியாக, முழுமையாக இன்னும் பணப்பலன்கள் வழங்கப்படாமல் இருப்பதால் அவர்கள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். இது மிகவும் வேதனைக்குரியது. மேலும் அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு குறித்து பேச்சு வார்த்தையை உடனடியாக நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும்.

முகநூலில் தொடர்பு கொள்ள

செய்திமடலுக்கு பதிவு செய்க

உங்கள் மின்னஞ்சல் முகவரி சமர்ப்பிக்கவும்

  • சமீபத்திய செய்திகள்
  • நிகழ்வுகள் செய்திகள்