ஜெயலலிதா உடல் நிலை குறித்த தலைவர்களின் சந்தேகங்களுக்கு அரசு பதிலளிக்க வேண்டும் : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தேனாம்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 16 பேரும், சென்னையில் ஒரு மாணவரும் பலியாகியுள்ளனர். இதை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் நடக்கும் கொலைகளை காவல்துறை கட்டுப்படுத்த வேண்டும். முதல்வர் ஜெயலலிதா, மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை பெறும் நிலையில், தமிழகத்தில் அனைத்து துறைகளும் தொய்வின்றி செயல்பட வேண்டும். கவர்னர் எடுத்த முடிவு அவசியமான ஒன்று.

ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து வெளியாகும் தகவல்களில் அதிக கவனம் செலுத்துவது தவிர்க்கப்பட வேண்டும். சமூக வலைதளங்களை சமூக பார்வையோடு பயன்படுத்தினால் அனைவருக்கும் நல்லது. அவர் உடல்நலம் தொடர்பாக மருத்துவமனை சார்பில் அறிக்கை கொடுக்கப்படுகிறது. அதை நம்புவதும் நம்பாமல் இருப்பதும் அவரவர் விரும்பம். ஒவ்வொரு கட்சியினரும் ஒவ்வொரு விதமான கருத்துக்களை தெரிவிக்கின்றனர். அது அந்தந்த கட்சிகளின் உரிமை. அது சரியா, தவறா என்பதை விளக்குவது ஆட்சியாளர் மற்றும் அரசின் கடமை. எங்களை பொறுத்தவரை முதல்வர் ஜெயலலிதா பூரண குணம் அடைய வேண்டும். பேட்டியின்போது, மாநில நிர்வாகிகள் கோவை தங்கம், விடியல் சேகர், என்.டி.எஸ்.சார்லஸ், ஜி.ஆர்.வெங்கடேஷ், ஆர்.சீனிவாசன், உள்பட பலர் உடனிருந்தனர்.

முகநூலில் தொடர்பு கொள்ள

செய்திமடலுக்கு பதிவு செய்க

உங்கள் மின்னஞ்சல் முகவரி சமர்ப்பிக்கவும்

  • சமீபத்திய செய்திகள்
  • நிகழ்வுகள் செய்திகள்