சேலம் இரும்பு உருக்காலையைத் தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது: ஜி.கே.வாசன்

சேலம் இரும்பு உருக்காலையைத் தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
நாட்டின் பெருமைக்குரிய, அரசு பொதுத்துறை நிறுவனங்களில் சேலம் உருக்காலை முதல் வரிசையில் உள்ளது. இரும்பாலையாகத் தொடங்கப்பட்டு பிறகு உருக்காலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு ரூ.2,797 கோடி முதலீட்டில் செயல்பட்டு வருகிறது. நாட்டின் பாதுகாப்புக்கான பீரங்கி குண்டுகள், தோட்டாக்கள், சில்லறை காசுகள், வெளிநாடுகளில் உள்ள மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தும் பிளேடுகள், கத்தி, ஊசி போன்ற கருவிகள் உற்பத்தி செய்யப்படும் உலகத்தரம் வாய்ந்த ஸ்டீல்களால் ஆனவை.

ஒட்டு மொத்த பொதுத்துறை நிறுவனங்களின் லாப நஷ்டத்தைக் கணக்கிட்டு, லாபத்தில் இயங்கும் சேலம் உருக்காலை உள்பட 22 பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் வசம் ஒப்படைக்க மத்திய அரசு முயற்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.

எனவே, சேலம் மாவட்டத்தின் அடையாளமாகவும், 2 ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரமாகவும், தென்னிந்தியாவின் சிறப்பான நிறுவனமாகவும் விளங்கும் சேலம் உருக்காலையை மத்திய அரசு தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது. இதைத் தடுக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட வேண்டும் என்று கூறியுள்ளார்.

முகநூலில் தொடர்பு கொள்ள

செய்திமடலுக்கு பதிவு செய்க

உங்கள் மின்னஞ்சல் முகவரி சமர்ப்பிக்கவும்

  • சமீபத்திய செய்திகள்
  • நிகழ்வுகள் செய்திகள்