காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி ஜி.கே.வாசன் தலைமையில் த.மா.கா.வினர் ஆர்ப்பாட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி அரியலூரில் ஜி.கே.வாசன் தலைமையில் த.மா.கா.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கர்நாடக அரசு தமிழகத்திற்கு முறைப்படி காவிரியில் தண்ணீர் திறந்து விட வேண்டும், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க முன்வர வேண்டும், தமிழக அரசு அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி பிரதமரையும், ஜனாதிபதியையும் சந்தித்து காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கான உரிமையை பெற்றுத்தர வலியுறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூரில் த.மா.கா. சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-

கர்நாடக அரசு தண்ணீர் தராததால் தமிழகத்தில் 25 லட்சம் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடக அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுத்து பா.ஜ.க.வும், காங்கிரசும் தமிழக விவசாயிகளை நசுக்குகின்றன.

விவசாயிகள் வாங்கி உள்ள பயிர்க்கடன்களை உடனே ரத்து செய்ய வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு, தமிழகத்தை பகடைக்காயாக வைத்து அரசியல் ஆதாயம் பெற முயற்சிக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

முகநூலில் தொடர்பு கொள்ள

செய்திமடலுக்கு பதிவு செய்க

உங்கள் மின்னஞ்சல் முகவரி சமர்ப்பிக்கவும்

  • சமீபத்திய செய்திகள்
  • நிகழ்வுகள் செய்திகள்