கர்நாடகத்துக்கு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன் அறிக்கை

கர்நாடகத்துக்கு பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழக கர்நாடக எல்லையில் பேருந்து மற்றும் சரக்குப் போக்குவரத்து தடையின்றி தொடர்ந்து நடைபெற உடனடியாக சுமூகத்தீர்வு காண வேண்டியது இரு மாநில அரசுகளின் கடமை. தமிழக கர்நாடக எல்லையில் பேருந்து மற்றும் சரக்குப் போக்குவரத்துக்கு ஏற்பட்டிருக்கும் தடையை நீக்கி பொதுமக்கள் சிரமமின்றி பயணிக்க இரு மாநில அரசுகளும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 15 நாட்களுக்கும் மேலாக தமிழக கர்நாடக மாநில எல்லையில் போக்குவரத்து தடையால் மக்கள் நடந்து போக வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்கள்.

இவ்வாறு பொது மக்கள் நடந்து செல்லக்கூடிய காட்சிகளை தொலைக்காட்சியில் பார்க்கும் போதும், வானொலியில் செய்திகள் கேட்கும் போதும் மிகவும் வேதனையாக இருக்கிறது. மேலும் நாம் சுதந்திரம் பெற்ற இந்தியாவில் தான் வாழ்கிறோமா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இது வாக்களித்த மக்களுக்கு அரசு செய்யும் துரோகமாகும்.

இரு மாநில மக்கள் தங்களின் கல்விக்காகவும், வேலைக்காகவும், தொழிலுக்காகவும், வியாபாரத்திற்காகவும் மாநிலம் விட்டு மாநிலம் செல்வது வழக்கமான ஒன்று. ஆனால் தமிழக, கர்நாடக மாநில எல்லையில் பேருந்து போக்குவரத்து என்பது கேள்விக்குரியாக உள்ளதால் குறிப்பாக மாணவர்கள், தொழிலாளிகள், வியாபாரிகள், நோயாளிகள் ஆகியோர்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் லாரிகளின் போக்குவரத்துக்கும் தடை ஏற்பட்டுள்ளதால் பொருளாதாரத்தில் தேக்க நிலை ஏற்படும். இதனால் இரு மாநில அரசின் பொருளாதார முன்னேற்றத்தில் தடை ஏற்படுவதோடு மக்கள், வியாபாரிகள், தொழிலாளிகள் ஆகியோர்களின் வருமானம் பெருமளவு பாதிக்கப்படும்.

பேருந்து, ரெயில், விமானம் மற்றும் அனைத்துப் போக்குவரத்து வசதிகளும் இருக்கின்ற இந்த காலக்கட்டத்தில், தமிழக- கர்நாடகா எல்லையில் போக்குவரத்து வசதிகள் இன்றைக்கு அரசியல் காரணங்களினால் தடைப்பட்டிருப்பது ஜனநாயகத்தில் ஏற்புடையதல்ல.

எனவே தமிழக-கர்நாடக மாநில அரசுகள், அமைச்சர்கள் போக்குவரத்துக்கான பிரச்சனையைத் தீர்ப்பதற்கு முன்வராத சூழலில் இரு மாநில அரசின் அதிகாரிகள் நேரடியாக கலந்து பேசி போக்குவரத்தை சீர் செய்து, தொடர்ந்து பயணிகளின் போக்குவரத்துக்கும், சரக்குப் போக்குவரத்துக்கும் வழிவகைச் செய்திட வேண்டும்.

தமிழகமும், கர்நாடகமும் நமது இந்திய நாட்டில் அங்கம் வகிக்கின்றன. இவைகள் ஒன்றும் வேறு வேறு நாடுகள் இல்லை. எனவே தமிழக, கர்நாடக மாநில எல்லையில் அனைத்து பாதுகாப்பு வசதிகளையும் ஏற்பாடு செய்து பேருந்துகள், லாரிகள் உட்பட பல்வேறு போக்குவரத்து வசதிகளை குறுகிய காலக்கெடுவிற்குள் தொடர்ந்து இயக்கிட இரு மாநில அரசுகளும் முன்வர வேண்டும்.

மேலும் தமிழக, கர்நாடக மாநில மக்களிடையே நல்லுறவு என்றும் தொடர வேண்டும், நாட்டின் ஒற்றுமை காக்கப்பட வேண்டும். இதற்கு எந்த ஒரு அரசும், இயக்கமும் தடையாக இருக்கக்கூடாது என்றும் த.மா.கா. சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

முகநூலில் தொடர்பு கொள்ள

செய்திமடலுக்கு பதிவு செய்க

உங்கள் மின்னஞ்சல் முகவரி சமர்ப்பிக்கவும்

  • சமீபத்திய செய்திகள்
  • நிகழ்வுகள் செய்திகள்