காவிரி மேலாண்மை வாரியத்தை காலக்கெடுவுக்குள் அமைக்க வேண்டும் ஜி.கே.வாசன் கோரிக்கை

கர்நாடக அரசு – கர்நாடக சட்டப்பேரவை மற்றும் சட்ட மேலவைக்கூட்டத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் தர முடியாது என தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது.

மேலும் காவிரியில் கர்நாடக மாநில குடிநீருக்கு மட்டுமே நீர் இருப்பதாக தெரிவித்திருப்பதும், தமிழகத்தில் குறுவை சாகுபடி செய்துவிட்டு, இப்போது சம்பா சாகுபடிக்கு தண்ணீர் கேட்கிறார்கள் என்றும் கர்நாடக முதல்–மந்திரி தெரிவித்திருப்பது உண்மைக்கு முற்றிலும் புறம்பானது. இது ஏற்படையதல்ல. கர்நாடக அரசின் இந்த தீர்மானம் உச்சநீதிமன்ற தீர்ப்பினை மதிக்கவில்லை என்பதையே எடுத்துக்காட்டுகிறது.

எனவே, மத்திய அரசு காவிரி நதிநீர் பங்கீட்டில் கர்நாடக அரசோடு நேரிடையாகத் தொடர்பு கொண்டு அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு, உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மேலும், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை காலக்கெடுவுக்குள் அமைத்திட வேண்டும். தமிழக அரசும் மத்திய அரசோடு தொடர்பு கொண்டு காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்திற்கான உரிமையை பெற்றுத்தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முகநூலில் தொடர்பு கொள்ள

செய்திமடலுக்கு பதிவு செய்க

உங்கள் மின்னஞ்சல் முகவரி சமர்ப்பிக்கவும்

  • சமீபத்திய செய்திகள்
  • நிகழ்வுகள் செய்திகள்