ஸ்டாலின்- ஜி.கே.வாசன் திடீர் சந்திப்பு.. உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி ?

சென்னை: திமுக பொருளாளர் ஸ்டாலினை சென்னையில், இன்று, த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். உள்ளாட்சி தேர்தல் நெருங்கும் நிலையில் இரு தலைவர்களும் சந்தித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

சட்டசபை தேர்தலின்போது, திமுக-காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. உள்ளாட்சி தேர்தலிலும், இவ்விரு கட்சிகளும் கூட்டணி அமைக்கப்போவதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், காங்கிரசிலிருந்து பிரிந்து சென்ற தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், திமுக பொருளாளரும், எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலினை அவரின் ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் வைத்து சந்தித்து அரை மணி நேரத்திற்கும் அதிகமாக ஆலோசனை நடத்தியுள்ளார்.

உள்ளாட்சி தேர்தலில் காங்கிரசை கழற்றிவிட திமுக ஆயத்தமாகிவிட்டதோ என்ற எண்ணம், அரசியல் நோக்கர்கள் இடையே ஏற்பட்டுள்ளது. சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சியை பிடிக்க முடியாமல் போனதற்கு, காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட பெரும்பாலான பகுதிகளில் மண்ணை கவ்வியது ஒரு காரணம் என்ற அதிருப்தி திமுகவின் பெரும்பாலான நிர்வாகிகளுக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

தி.மு.க. முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் சகோதரி கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் மகளுக்கும், த.மா.கா. முன்னாள் எம்.பி. என்.எஸ்.வி. சித்தனின் பேரனுக்கும் ஜூலையில் மதுரையில் திருமணம் நடந்தது. திருமண விழாவுக்கு தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் தனது மனைவி துர்காவுடன் வந்திருந்தார். த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசனும், தனது மனைவி சுனிதாவுடன் வந்திருந்தார். திருமண விழாவில் இருவரும் அருகருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். இரண்டு தலைவர்களும் சுமார் 40 நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போதே திமுக கூட்டணியில் த.மா.கா இணைந்து விட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் இன்றைய சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

முகநூலில் தொடர்பு கொள்ள

செய்திமடலுக்கு பதிவு செய்க

உங்கள் மின்னஞ்சல் முகவரி சமர்ப்பிக்கவும்

  • சமீபத்திய செய்திகள்
  • நிகழ்வுகள் செய்திகள்