மீனவர் பிரச்னையில் நல்ல தீர்வு எட்ட வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

தமிழக மீனவர் பிரச்னையில் நல்ல தீர்வு ஏற்படுத்த மத்திய அரசை தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்த வேண்டுமென தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:-

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமான மீன்பிடித் தொழில் இலங்கை கடற்படையால் பெருமளவு பாதிக்கப்பட்டு வருகிறது. இலங்கை கடற்படையின் அராஜகச் செயலை மத்திய-மாநில அரசுகளுக்கு வலியுறுத்தும் வகையில் மீனவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்தும், போராட்டங்கள் நடத்தியும் வருகின்றனர். ஆனால், தமிழக மீனவர்கள் பிரச்னையில் மத்திய பாஜக அரசு மெத்தனப் போக்கையே கடைப்பிடிக்கிறது.

எனவே, இலங்கை வசமுள்ள 4 தமிழக மீனவர்களையும், அவர்களது 114 படகுகளையும் மீட்பதற்கும், சேதமடைந்த 18 படகுகளுக்கு முழு நிவாரணம் பெற்றுத் தருவதற்கும் மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இருநாட்டு மீனவப் பிரதிநிதிகளுக்கு இடையே அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று சுமூகத் தீர்வு எட்டப்படும் வரை தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழிலுக்கு இடையூறாக இருக்கக் கூடாது என்பதை மத்திய அரசு இலங்கைக்கு உறுதிபடத் தெரிவிக்க வேண்டும்.

இந்தப் பிரச்னைக்கு மத்திய அரசு விரைவில் நல்ல தீர்வு ஏற்படுத்தி கொடுக்க தமிழக அரசு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்த வேண்டும் என ஜி.கே.வாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.

முகநூலில் தொடர்பு கொள்ள

செய்திமடலுக்கு பதிவு செய்க

உங்கள் மின்னஞ்சல் முகவரி சமர்ப்பிக்கவும்

  • சமீபத்திய செய்திகள்
  • நிகழ்வுகள் செய்திகள்