ஜி.கே.வாசன்

திரு.ஜி.கே.வாசன் (கோவிந்தசாமி கருப்பையா வாசன், பிறப்பு டிசம்பர் 28, 1964) கப்பல் துறையின் முன்னாள் மத்திய அமைச்சராவார். அவர் தமிழ்நாட்டிலிருந்து இந்திய தேசிய காங்கிரஸின் சார்பில் தேர்ந்தெடுக்கப் பட்ட பாராளுமன்ற உறுப்பினர்.

அவர், தம் மேல் நிலைக் கல்வியை சென்னைக் கிறித்துவக் கல்லூரி பள்ளியிலும், கல்லூரி படிப்பை புதுக் கல்லூரியிலும் (New College) பயின்றவர். அவர், முதலில் மூத்த காங்கிரஸ் தலைவராயிருந்து, பின்னாளில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை உருவாக்கிய திரு.ஜி.கே.மூப்பனார் அவர்களின் தனயனாவார். அவர் தம் தந்தையார் மறைவுக்குப் பின், திரு.வாசன் அவர்கள், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரானார், பிறகு அவர் தம் கட்சியை இந்திய காங்கிரஸ் கட்சியுடன் இணைத்தார். காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்கள், திரு. வாசனை கட்சியின் செயலாளராக நியமித்தார். 2003ம் ஆண்டு, நவம்பர் மாதம், திரு.ஜி.கே.வாசன் அவர்கள், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமிக்கப் பட்டார்.

2014ம் ஆண்டு நவம்பர் 3ம் தேதி, திரு.வாசன் அவர்கள், தன் சொந்த அரசியல் கட்சியை ஆரம்பிக்க வேண்டி காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியே வந்தார்.

திரு.வாசன் அவர்கள் கீழ்க்கண்ட பதவிகளை வகித்தவர்::

 1. மே 2009 - மே 2014 : மத்திய அமைச்சர், கப்பல் துறை, இந்திய அரசு
 2. மார்ச் 2009 - மே 2009: மத்திய இணை அமைச்சர், தொழில் மற்றும் வேலை வாய்ப்புத் துறை (தனிப் பொறுப்பு) (கூடுதல் பொறுப்பு)
 3. ஏப்ரல் 2008: மாநிலங்களவைக்கு மீண்டும் தேர்வு (இரண்டாம் முறை)
 4. ஜனவரி 2006 - மே 2009 : மத்திய இணை அமைச்சர், புள்ளியியல் மற்றும் திட்டம் அமலாக்கத் துறை (தனிப் பொறுப்பு)
 5. அக்டோபர் 2004 - ஜனவரி 2006 : உறுப்பினர், ஆலோசனைக் குழு, நகர்ப்புற வளர்ச்சித் துறை
 6. ஆகஸ்ட் 2004 - ஜனவரி 2006 - உறுப்பினர், நிலக்கரி மற்றும் உருக்கு குழு
 7. நவம்பர் 2003 - பிப்ரவரி 2006 : தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
 8. ஜூன் 2003 - ஜூலை 2004: உறுப்பினர், கீழ்மட்டச் சட்டக்குழு
 9. ஆகஸ்ட் 2002 - நவம்பர் 2003: செயலாளர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி
 10. ஜனவரி 2003 - பிப்ரவரி 2004: உறுப்பினர், நகர் மற்றும் கிராமப்புற வளர்ச்சிக் குழு
 11. ஜூன் 2002 - ஜூலை 2004: உறுப்பினர், துறை சார்ந்த நகர் மற்றும் கிராமப்புற வளர்ச்சி நிரந்தர‌க் குழு
 12. மே 2002 - ஜனவரி 2004: உறுப்பினர், ஆலோசனைக் குழு, விவசாய‌த் துறை
 13. ஏப்ரல் 2002: மாநிலங்களவைக்குத் தேர்வு
 14. ஆகஸ்ட் 2001 - ஆகஸ்ட் 2002: தலைவர், தமிழ் மாநில காங்கிரஸ்

முகநூலில் தொடர்பு கொள்ள

செய்திமடலுக்கு பதிவு செய்க

உங்கள் மின்னஞ்சல் முகவரி சமர்ப்பிக்கவும்

 • சமீபத்திய செய்திகள்
 • நிகழ்வுகள் செய்திகள்