பெருந்தலைவர் காமராஜர்

கே.காமராஜ் என அழைக்கப் படும், திரு.குமாரசாமி காமராஜ் ( ஜூலை 15, 1903 - அக்டோபர் 2, 1975) அவர்கள், 1960களில் 'அரசரை உருவாக்குபவர் (King Maker)' என எல்லாராலும் அறியப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதி. அவர் 1954 முதல் 1963 வரை தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும், 1952 முதல் 1954 வரையிலும், மீண்டும் 1967 முதல் 1975 வரையிலும் மக்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தவர். அவர் தம் எளிமைக்கும் நாணயத்திற்கும் அனைவராலும் அறியப் படுபவர்

திரு.காமராஜர் இந்திய விடுதலை இயக்கத்தில் பங்கேற்றவர். அவர் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக இருந்த போது, திரு.ஜவஹர்லால் நேரு அவர்களின் மறைவுக்குப் பிறகு கட்சியை வழி நடத்திச் செல்வதிலும் மற்றும் லால் பகதூர் சாஸ்திரி (1964), இந்திரா காந்தி (1966) ஆகிய இரு பிரதமர்களை பதவிக்குக் கொண்டு வருவதிலும் கருவியாக விளங்கியவர்.

அவருடைய சொந்த மாநிலமான தமிழ்நாட்டில் அவர் முதல்வராக இருந்த பொழுது, இலவசக் கல்வியையும், மதிய உணவுத் திட்டத்தையும் அறிமுகம் செய்ததின் மூலம் லட்சக்கணக்கான ஏழை கிராமவாசிகளிக்குப் பள்ளிக் கல்விக் கிடைக்கச் செய்தவர் என்று எல்லோராலும் நினைவில் வைக்கப் படுபவர். 1976ம் ஆண்டு, அவரது மறைவுக்குப் பிறகு, அன்னாருக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான 'பாரத ரத்னா' வழங்கப் பட்டது. அவர் நினைவாக, சென்னை விமான நிலையம், ' காமராஜர் விமான நிலையம்' என்றும், சென்னையின் கடற்கரைச் சாலை ' காமராஜர் ரோடு' என்றும், பெங்களூருவின் வடக்கு பரேட் ரோடு 'கே.காமராஜ் ரோடு' என்றும் மேலும் மதுரைப் பல்கலைக் கழகம் ' மதுரைக் காமராஜர் பல்கலைக் கழகம்' என்றும் அழைக்கப் படுகின்றன.

இளமை வாழ்க்கை

திரு.காமராஜ் அவர்கள், தமிழ்நாட்டிலுள்ள விருதுநகரில் திரு.குமாரசாமி நாடாருக்கும், திருமதி.சிவகாமி அம்மையாருக்கும், 1903ம் ஆண்டு, ஜூலை மாதம், 15ம் தேதி மகனாகப் பிறந்தவர். 1907ம் ஆண்டு, காமராஜர் பிறந்து நான்கு வருடங்களுக்குப் பிறகு அவரது சகோதரி நாகம்மை பிறந்தார். 1907ம் ஆண்டு அவரது ஐந்தாம் வயதில் திரு.காமராஜ் திண்ணைப் பள்ளியில் சேர்க்கப் பட்டார். அதன் பின், 1908ம் ஆண்டு அவர் ஏனாதி நாராயண வித்யாசாலை பள்ளிக் கூடத்தில் சேர்ந்தார், 1909ம் ஆண்டு விருதுப்பட்டி உயர் நிலைப் பள்ளியில் சேர்ந்தார். திரு.காமராஜ் அவர்களின் தந்தையார் அவருக்கு ஆறு வயதாக‌ இருக்கும் போதே உலக வாழ்வை விட்டு மறைந்தார், அதனால் அவருடைய அன்னையார் தனியாகக் குடும்ப பாரத்தைச் சுமக்கும் நிலை வந்தது. 1914ம் ஆண்டு, திரு.காமராஜர் தன் குடும்பச் சுமையை ஏற்க வேண்டி வந்ததால் பள்ளிப் படிப்பைத் தொடர முடியாத நிலை வந்தது.

இந்த நேரத்தில், திரு.காமராஜர், இந்திய சுயாட்சி இயக்கத்தின் பொதுக் கூட்டங்களிலும், ஊர்வலங்களிலும் பங்கேற்கத் தொடங்கினார். தினசரி நாளிதழ்களைப் படிப்பதின் மூலம், திரு.காமராஜர், அப்பொழுது நிலவி வந்த அரசியல் நிலவர‌ங்களில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார்.

ஜாலியன் வாலாபாக் படுகொலை அவர் வாழ்வின் தீர்க்கமான திருப்பு முனையாக அமைந்தது. அன்னிய ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருதலும், நாட்டுச் சுதந்திரத்திற்காகப் போராடுதலுமே அவரது லட்சியங்கள் என அவர் தீர்மானித்தார். 1920ம் ஆண்டு, தனது 18வது வயதில் அவர் ஒரு துடிப்பான அரசியல் தொண்டராகவும், முழு நேர காங்கிரஸ் ஊழியராகவும் மாறினார். 1921ம் ஆண்டு காமராஜ் அவர்கள் காங்கிரஸ் தலைவர்களுக்காக விருதுநகரில் பொதுக் கூட்டங்களை ஏற்பாடு செய்ய ஆரம்பித்தார். அவர் காந்தி அடிகளைச் சந்திப்பதில் ஆர்வமுள்ளவராயிருந்தார், 1921ம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி, காந்தி அடிகள் மதுரைக்கு விஜயம் செய்த போது, காமராஜ் அவர்கள் அந்தப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு காந்தி அடிகளை முதன் முதலில் தரிசித்தார். அதன் பின், அவர் காங்கிரஸ் பிரச்சாரத்திற்காக கிராமங்களுக்குச் செல்லத் தொடங்கினார்.

ஒத்துழையாமை இயக்கத்தின் ஒரு அங்கமாக காங்கிரஸ், 1922ல் வேல்ஸ் இளவரசரின் இந்திய வருகையைப் புறக்கணித்தது. காமராஜர் சென்னைக்கு வருகை தந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஹரிஜன்களுக்கு எதிராக மேல் சாதியினரால் இழைக்கப்பட்டக் கொடுமைகளை எதிர்த்து திரு. ஜார்ஜ் ஜோசப் அவர்கள் தலைமையில் நடந்த வைக்கம் சத்தியாக்கிரஹத்திலும் திரு. காமராஜ் அவர்கள் பங்கேற்றார். 1923 முதல் 1925 வரை நடந்த நாக்பூர் கொடி சத்தியாக்கிரகத்திலும் அவர் பங்கேற்றார். 1927ம் ஆண்டு, காமராஜர் சென்னையில் வாள் சத்தியாக்கிரகத்தைத் தொடங்கினார். மேலும் நீல் சிலை சத்தியாக்கிரகத்திற்கு தலைமை ஏற்கவும் தேர்ந்தெடுக்கப் பட்டார், ஆனால் பிறகு அது சைமன் கமிஷன் புறக்கணிப்பால் கைவிடப் பட்டது. காமராஜர், ஆங்கிலேய அரசுக்கு எதிரான ஏறக்குறைய அனைத்து போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் வழி நடத்திச் சென்றார்.

வேதாரண்யத்தில் திரு.இராஜகோபாலச்சாரியார் அவர்களால் தலைமை ஏற்று நடத்தப் பட்ட உப்பு சத்தியாக்கிரகத்தில் பங்கேற்றதற்காக திரு. காமராஜ் அவர்கள் 1930ம் ஆண்டு முதன் முறையாக கோல்கத்தாவிலுள்ள அலிபூர் சிறையில் இரண்டு ஆண்டுக் காலம் சிறை வாசம் அனுபவித்தார், ஆனால், காந்தி - இர்வின் ஒப்பந்தத்தின் பொருட்டு, அவர் முழுக் காலம் முடிவதற்கு முன்னர் 1931ம் ஆண்டிலேயேச் சிறையிலிருந்து விடுவிக்கப் பட்டார்.

1932ம் ஆண்டில், காந்தி அடிகள் மும்பையில் கைது செய்யப் பட்டதை எதிர்த்து சென்னையில் கூட்டங்கள் நடத்துவதையும், ஊர்வலங்களுக்கு ஏற்பாடு செய்வதையும் எதிர்த்து பிரிவு 144ன் கீழ் தடை உத்தரவுப் பிறப்பிக்கப் பட்டிருந்தது. விருதுநகரில் காமராஜர் தலைமையின் கீழ் ஒவ்வொரு நாளும் ஊர்வலங்களும், ஆர்ப்பாட்டங்களும் நடந்தன. 1932ம் ஆண்டு, காமராஜர் மீண்டும் கைது செய்யப் பட்டு, ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப் பட்டார்.

1933ம் ஆண்டு, காமராஜர் விருதுநகர் குண்டு வழக்கில் பொய்க் குற்றம் சாட்டப் பட்டார். டாக்டர் வரதராஜுலு நாயுடு அவர்களும் திரு ஜார்ஜ் ஜோசப் அவர்களும் காமராஜருக்காக வாதிட்டு அவர் மீது சாட்டப்பட்டக் குற்றங்கள் ஆதாரமற்றவை என நிரூபித்தனர்.

மதராஸ் ஆளுநர் சர் ஆர்தர் ஹோப் இரண்டாம் உலகப் போர் நிதிக்காக நன்கொடைகள் திரட்டிக் கொண்டிருந்த பொழுது, காமராஜர், போர் நிதிக்காக நன்கொடை கொடுக்க வேண்டாம் என மக்களிடம் வேண்டித் தீவிரமான பிரச்சாரத்தை மாநிலம் முழுவதும் மேற்கொண்டிருந்தார். டிசம்பர் 1940ல் அவர் வார்தாவுக்கு காந்தியடிகளைச் சந்தித்து சத்தியாக்கிரகளின் பெயர்களை உள்ளடக்கிய பட்டியலுக்கு அனுமதியை வாங்குவதற்குச் சென்றுக் கொண்டிருக்கும் போது குண்டூரில் போர் நிதி அளித்தலுக்கு எதிராக உரைகள் நிகழ்த்திய காரணத்திற்காக இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டு வேலூர் மத்தியச் சிறைக்குக் கொண்டு வரப் பட்டார். அவர் சிறையில் இருக்கும் போதே விருதுநகர் நகராட்சி கவுன்சிலராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். அவர் 1941ம் ஆண்டு 9 மாத சிறை வாசத்திற்குப் பின் விடுவிக்கப் பட்டார், நாட்டின் பால் தான் ஆற்ற வேண்டியக் கடமை மிகுந்து இருப்பதாக நினைத்த அவர், தன் கவுன்சிலர் பதவியையும் துறந்தார். 'தன்னால் நியாயமாகப் பணியாற்ற முடியாத எந்தப் பதவியையும் ஒருவர் ஏற்கக் கூடாது' என்பதையே அவர் தன் குறிக்கோளாய் வைத்திருந்தார்.

1942ம் ஆண்டு காமராஜர் மும்பையில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் கலந்து கொண்டு, காந்தியடிகளால் தொடங்கப்பட்ட 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தின் பிரச்சாரப் பொருட்களை பரப்புவதன் பொருட்டுத் திரும்பினார். மும்பைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்துத் தலைவர்களுக்கும் காவல் தறை ஆணைப் பிறப்பித்தது. காமராஜர் இயக்கத்தின் செய்திகளை அனைத்து மாவட்ட மற்றும் உள்ளூர் தலைவர்களுக்குக் கொண்டுச் சேர்க்கும் வரை கைதாக விரும்பவில்லை. அதனால் அவர் சென்னைக்குச் செல்வதைத் தவிர்த்துத் தன்னுடையப் பயணத்தைச் சுருக்கிக் கொண்டார். அவர் காங்கிரஸ் தலைவர்களை கைது செய்வதற்காக காவல் துறையினர் பெரும் அளவில் அரக்கோணத்தில் திரண்டு இருந்ததைக் கண்டார், ஆயினும் அவர்களிடமிருந்து தப்பி, ராணிப் பேட்டை, தஞ்சாவூர், திருச்சி மற்றும் மதுரை ஆகிய இடங்களுக்குச் சென்று நிகழ்ச்சியைப் பற்றி உள்ளூர் தலைவர்களிடம் தகவல்களைக் கூறினார். தன் வேலைகளை முடித்ததும் அவர் விருதுநகரைச் சென்றடைந்து, உள்ளுர் காவல் நிலையத்திற்கு தான் கைதாக தயாராக இருப்பதாக தகவல் அனுப்பினார். அவர் 1942ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப் பட்டார், 3 ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு 1945ம் ஆண்டு ஜூன் மாதம் விடுதலையானார். இதுவே அவரது கடைசி சிறைவாசமாகும்.

காமராஜர் தன்னுடைய விடுதலை இயக்கப் போராட்டங்களுக்காக, ஆறு முறை, மொத்தம் 3000 தினங்களுக்கும் அதிகமாக, சிறை வாசம் அனுபவித்துள்ளார்.

அரசியலும், கல்வியும்

1953ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ம் நாள், திரு,காமராஜ் அவர்கள் சென்னை மாகாணத்தின் முதலமைச்சராகப் பதவி ஏற்றார். அனைவரும் வியக்கும் வகையில் தன் தலைமையை எதிர்த்த சி.சுப்பிரமணியம் மற்றும் எம்.பக்தவத்சலம் ஆகியோரை தனது புதிய அமைச்சரவையில் அங்கம் வகிக்கப் பரிந்துரைத்தார்.

முதலமைச்சர் என்ற முறையில் காமராஜர், ராஜாஜி அவர்களால் அறிமுகப் படுத்தப் பட்டக் குடும்பத் தொழில் அடிப்படையிலான பரம்பரைக் கல்விக் கொள்கையை நீக்கினார். கல்வி மற்றும் தொழில் துறையில் மாநிலம் பெரும் வளர்ச்சி அடைந்தது. கிராமப்புறங்களிலுள்ள ஏழைப் பள்ளி மாணவர்கள் தன் அருகாமையிலுள்ளப் பள்ளிக்கு மூன்று கிலோமீட்டர்களுக்கு மேல் நடக்கத் தேவை இல்லாத வகையில், புதிய பள்ளிக் கூடங்கள் திறக்கப் பட்டன. இருக்கும் வசதிகளைக் காட்டிலும் சிறந்த வசதிகள் செய்துக் கொடுக்கப் பட்டன. தொடக்கப் பள்ளி இல்லாத கிராமமே இல்லை, உயர் நிலைப் பள்ளி இல்லாத பஞ்சாயத்தே இல்லை என்னும் நிலை ஏற்பட்டது. பதினொன்றாம் வகுப்பு வரை இலவசக் கட்டாயக் கல்வியை அறிமுகப் படுத்தியதன் மூலம் காமராஜர் கல்லாமையை ஒழிக்கப் போராடினார். லட்சக்கணக்கான ஏழைக் குழந்தைகளுக்கு ஒரு வேளையாவது உணவுக் கிடைக்க வேண்டி மதிய உணவுத் திட்டத்தை அமலாக்கினார். (உலகத்திலேயே முதன் முறையாக மதிய உணவுத் திட்டம் 1920ம் ஆண்டு சட்ட மன்ற மேலவையின் ஒப்புதலோடு சென்னை மாநகராட்சியில் ஆயிரம் விளக்குப் பகுதியில் உள்ள ஒரு மாநகராட்சிப் பள்ளியில் காலை உணவாக அறிமுகப் படுத்தப் பட்டது.) பிறகு அது மேலும் நான்கு பள்ளிகளுக்கு விரிவுப் படுத்தப் பட்டது. இதுவே 1960ம் ஆண்டு காமராஜரால் தொடங்கப் பட்டு, பின் 1980ல் திரு.எம்.ஜி.ராமச்சந்திரனால் விரிவாக்கப் பட்ட மதிய உணவுத் திட்டத்தின் முன்னோடி ஆகும். பிஞ்சு மனங்களில் சாதி, மத மற்றும் வர்க்க வேற்றுமைகளைக் களைவதற்காக அவர் இலவசச் சீருடைகளை அறிமுகப் படுத்தினார்.

ஆங்கிலேய ஆட்சியில் கல்வி விகிதம் 7 சதவிகிதமாகவே இருந்தது. ஆனால், காமராஜரின் சீர்திருத்தங்களுக்குப் பிறகு அது 37% ஆக வளர்ந்தது. பள்ளிக்கூடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, கல்வித் தரத்தை மேம்படுத்தவும் முயற்சிகள் எடுக்கப் பட்டன. தரத்தை உயர்த்துவதன் பொருட்டு, வேலை நாட்கள் 180லிருந்து 200ஆக உயர்த்தப் பட்டன, தேவையற்ற விடுமுறை நாட்கள் குறைக்கப் பட்டன, பல்வேறுத் திறமைகளுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் பாடத் திட்டங்கள் மாற்றி அமைக்கப் பட்டன. 1959ம் ஆண்டு திரு.காமராஜ் அவர்களும், ஆளுநராயிருந்த திரு.பிஷ்ணுராம் மேதி என்பவரும் இணைந்து சென்னையில் இந்திய தொழில்நுட்பக் கழகத்தை (IIT) நிறுவும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சாதனைகள்

திரு.காமராஜ் அவர்கள் இந்தியாவின் இரண்டு பிரதம மந்திரிகளை - 1964ம் வருடத்தில் திரு.லால் பகதூர் சாஸ்திரி அவர்களும், 1966ம் ஆண்டு திருமதி இந்திரா காந்தி அவர்களும் - நியமிப்பதில் முக்கியப் பங்காற்றினார். தான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தக் காலம் முழுவதும், அவர் மக்களுக்கு இலவச உணவு மற்றும் கல்வி ஆகியவற்றை வழங்க பல முயற்சிகளை எடுத்தார். 1957ம் வருட கால கட்டத்தில் உலகம் முழுதிலுமே இந்த மாதிரியான முயற்சிகளில் இதுவே முதலானது. திரு. கே.காமராஜர் என்று எல்லோராலும் அழைக்கப் படும் திரு.குமாரசாமி காமராஜ் அவர்கள் ஒரு ஆற்றல் மிக்க இந்திய அரசியல்வாதி. அவர் இந்திய அரசியலில் 'அரசரை உருவாக்குபவர் (King Maker)' எனக் கருதப் பட்டவர், நேர்மை, ஒருமைப்பாடு, எளிமை ஆகிய நற்பண்புகளுக்காக மதிக்கப் பட்டவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நடத்தப் பட்ட இந்திய விடுதலை இயக்க நாள்களிலிருந்தே திரு.காமராஜர், சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவின் முதல் பிரதம மந்திரியாக தேர்ந்தெடுக்க‌ப்பட்ட திரு.ஜவஹர்லால் நேரு அவர்களின் நெருங்கிய நண்பராவார். காமராஜரை பற்றி மேலும் அறிய அவரது இந்த சரிதையைப் படிக்கவும். திரு.காமராஜ் அவர்கள் இந்தியாவின் இரண்டு பிரதம மந்திரிகளை - 1964ம் வருடத்தில் திரு.லால் பகதூர் சாஸ்திரி அவர்களும், 1966ம் ஆண்டு திருமதி இந்திரா காந்தி அவர்களும் - நியமிப்பதில் முக்கியப் பங்காற்றினார். அதனால் மக்கள் அவரை அன்புடன் 'தென் இந்தியாவின் காந்தி' என்றும், 'கருப்பு காந்தி' எனவும் அழைத்தனர். இன்றும் அவருடைய சொந்த மாநிலமான தமிழ்நாட்டில் வசிப்பவர்கள், வறுமைக்கோட்டுக்குக் கீழ் வசிப்பவக்கும் பல்லாயிரக்கணக்கானவர்களுக்குக் கல்விச் செல்வம் அளித்ததற்காக அவரை நினைவு கூறுகின்றனர்.

த‌மிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தக் காலம் முழுவதும், அவர் மக்களுக்கு இலவச உணவு மற்றும் கல்வி ஆகியவற்றை வழங்க பல முயற்சிகளை எடுத்தார். 1957ம் வருட கால கட்டத்தில் உலகம் முழுதிலுமே இந்த மாதிரியான முயற்சிகளில் இதுவே முதலானது. இந்த சமூகத்தின் ஏழைகள் மற்றும் தாழ்த்தப் பட்டவர்களின் நன்மைக்காக, திரு. காமராஜ் அவர்கள் ஆற்றிய தொண்டுகளை நினைவு கூறும் வகையில் இந்திய அரசு 1976ம் ஆண்டு அவருடைய மறைவுக்குப் பிறகு 'பாரத ரத்னா' விருதை அளித்தது. தன்னுடைய சிறு பிராயத்திலிருந்தே அரசியலில் நாட்டம் கொண்டிருந்தாலும், காமராஜர் தன்னுடைய பதினாறாம் வயதிலேயே இந்திய தேசிய காங்கிரசின் முழு நேரத் தொண்டரானார். அவருடைய பணிகள், பேச்சாளர்களை அழைப்பது, கூட்டங்களுக்கான ஏற்பாடுகளை செய்வது மேலும் காங்கிரஸ் கட்சிக்காக நிதி திரட்டுவது ஆகியவை. 1930ம் ஆண்டு, திரு.ராஜாஜி அவர்கள் முன்னிலை வகித்த உப்பு சத்தியாக்கிரகத்தின் ஒரு அங்கமாக வேதாரண்யத்தை நோக்கி நடந்தப் பேரணியில் காமராஜர் பங்கேற்றார். இந்திய விடுதலைக்கானப் போராட்டங்களில் திரு. குமாரசாமி காமராஜர் அவர்கள் பலமுறை சிறை வாசத்தை அனுபவித்தவர்.

முகநூலில் தொடர்பு கொள்ள

செய்திமடலுக்கு பதிவு செய்க

உங்கள் மின்னஞ்சல் முகவரி சமர்ப்பிக்கவும்

  • சமீபத்திய செய்திகள்
  • நிகழ்வுகள் செய்திகள்