தமிழ் மாநில காங்கிரஸ்

தமிழ் மாநில காங்கிரஸ் (தமாகா) தமிழகத்தின் ஒரு அரசியல் கட்சியாகும். அ.இ.அ.தி.மு.க.வுடன் கூட்டுச் சேர்வது என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை எடுத்த முடிவை எதிர்த்து, திரு.ஜி.கே.மூப்பனார் அவர்கள் 1996ம் ஆண்டு, காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை நிறுவினார். 2001ம் ஆண்டு, திரு. மூப்பனார் அவர்கள் மறைவுக்குப் பின், அவருடைய மகன் திரு.ஜி.கே.வாசன் அவர்கள் கட்சியின் தலைவரானார். 2002ம் ஆண்டு, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியுடன் இணைந்தது. கட்சியின் காரிய கமிட்டி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு எதிராக செயல் படுவதற்கும், மற்றும் தமிழ்நாட்டின் பிரச்சினைகளைப் பற்றி இந்திய தேசிய காங்கிரஸ் வலுவான நிலைப்பாடை எடுக்ககாததற்கும் எதிர்ப்பு தெரிவித்து நவம்பர் 3, 2014 அன்று இந்திய தேசிய காங்கிரஸில் இருந்து பிரிந்த திரு.ஜி.கே.வாசன் அவர்கள், மீண்டும், 2014ம் ஆண்டு, நவம்பர் 28ம் தேதி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை புதுப்பித்தார்.

தமிழ் மாநில காங்கிரஸ் நோக்கங்கள் :

 1. மது இல்லாத் தழிழகம்
 2. மாசு இல்லாத் சுற்றச்சூழல்
 3. ஊழல் இல்லா அரசு நிர்வாகம்
 4. மோதல் இல்லா மத நல்லிணக்கம்
 5. சாதிகள் அற்ற தமிழ் சமுதாயம்
 6. வணிக மயமாகாத கல்வி
 7. கொள்ளை போகாத இயற்கை வளம்
 8. தடையில்லா மின்சாரம்
 9. தாராளமாக உணவுப் பொருட்கள்
 10. கட்டுப்படுத்தப்பட்ட விலைவாசி
 11. எல்லோருக்கும் மருத்துவ வசதி
 12. இலாபகரமான வேளாண்மை
 13. உறுதி செய்யப்பட்ட தொழிலாளர் உரிமைகள்
 14. சீர்மிகு நீர் மேலாண்மை
 15. சிறப்பான சட்டம் ஒழுங்கு
 16. பெண்ணுரிமைப் பாதுகாப்பு
 17. தலித் மற்றும் சிறுபான்மையினருக்கு உரிய அதிகாரப் பங்கீடு
 18. வேலை வாய்ப்புகள் நிறைந்த தொழில் வளர்ச்சி
 19. எல்லோரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சி
 20. அனைவருக்கும் வாய்ப்பு அளிக்கும் சமூக நீதி

முகநூலில் தொடர்பு கொள்ள

செய்திமடலுக்கு பதிவு செய்க

உங்கள் மின்னஞ்சல் முகவரி சமர்ப்பிக்கவும்

 • சமீபத்திய செய்திகள்
 • நிகழ்வுகள் செய்திகள்