தஞ்சை உள்பட 3 தொகுதிகளில் தேர்தல் முறையாக நடைபெறுமா? ஜி.கே.வாசன் சந்தேகம்

வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் தமாகா பிரமுகர் இல்ல திருமண விழாவில் நேற்று மாலை தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டார். பின்னர் அவர் அளித்தபேட்டி: நடைபெறவுள்ள 3 தொகுதி தேர்தலில் தமிழ்மாநில காங்கிரஸ் பங்கேற்பதில்லை என்று ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் முறையாக நடைபெறுமா என்ற சந்தேகம் எங்களுக்கு உள்ளது. பாலாற்றில் தடுப்பணை கட்டியது ஏற்புடையதே அல்ல. இது கண்டிக்கதக்கது. தமிழக பொதுப்பணித்துறை முன்னெச்சரிக்கையோடு நடந்திருக்க வேண்டும்.

உள்ளாட்சித்தேர்தல் குறிப்பிட்ட காலகெடுக்குள் நடைபெறவேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடாக உள்ளது. ராணிப்பேட்ைடயில் பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கிவருகிறது. அங்கு வெளியேறும் கழிவுநீர், சுத்திகரிக்கப்படாமல் பாலாற்றில் விடப்படுகிறது. இதனால் குடிநீரின் தன்மை மாறிவிட்டது. இதை சரிசெய்ய உடனடியாக நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும். பொது சிவில் சட்டம் தேவையற்ற ஒன்று. இவ்வாறு அவர் கூறினார்.

முகநூலில் தொடர்பு கொள்ள

செய்திமடலுக்கு பதிவு செய்க

உங்கள் மின்னஞ்சல் முகவரி சமர்ப்பிக்கவும்

  • சமீபத்திய செய்திகள்
  • நிகழ்வுகள் செய்திகள்